Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். செல்வராஜ்
'அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்தில் தமிழர் பிரதிநித்துவங்களை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும். அந்நிலையை உருவாக்குவதற்காக புதிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இதனை எமது மக்கள் சிந்தித்து பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் பிரதிநிதித்துவ அதிகரிப்பு ஐ.தே.க.வினால் மட்டுமே சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
பதுளை, பள்ளக்கட்டுவையில் புதன்கிழமை (05) இடம்பெற்ற ஊவா மாகாண உதவி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
' 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. நாடாளுமன்றத்துக்கு வரும் 20ஆவது திருத்தத்தை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது.
ஆனால், தமிழர்களின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி செல்லும் தமிழ் பிரதிநிதிகளால் முடியும். திருத்தங்களின்றி 20ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுமானால் பதுளை போன்ற பிரதேசங்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தமிழர்கள் தெரிவாவது சாத்தியமற்ற விடயமாகி விடும்.
நடைபெற போகும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் எனது வெற்றியை, எமது மக்கள் உறுதிப்படுத்துவர். நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலே, அண்மையில் நியமனம்பெற்ற உதவி ஆசிரியர்கள் என்ற பதத்திலிருந்து 'உதவி' என்ற பதத்தை நீக்கி ஆசிரியர்கள் என்ற நிலையை உருவாக்குவேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago