Sudharshini / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹெரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் வைத்து வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த பஸ்ஸில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். பஸ் சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமாகம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago