Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 14 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேயிலைத் தொழிற்துறைக்கு பங்களிப்பு வழங்கி வரும் அனைத்துப் பங்குதாரர்களின் பங்குப்பற்றலுடன் 8 ஆவது தேசிய தேயிலை நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (13) அன்று பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.
சுமார் 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்று சிறப்பு வாய்ந்த இலங்கைத் தேயிலைத் தொழிற்துறையின் கலாசார நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விழா, சித்திரை மாதம் வரை உற்பத்தி செய்யப்படும் தேயிலையை முதன் முதலாக இறைவனுக்காக படைக்கப்பட்டு,பூஜை வழிபாடுகளை மேற் கொண்டு வருகின்ற ஒரு தேசிய விழாவாகும்
இவ் நிகழ்வுகளுக்கு இலங்கை தேயிலை சபையின் பிரதி ஆணையாளர் சமரவீர உதவி ஆணையாளர் பட்டுவங்துடாவ மற்றும் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலை உற்பத்தி நில உரிமையாளர்கள், தேயிலைத் தொழிற்துறையைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago