Editorial / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கௌசல்யா
செப்டம்பர் 22 ஆம் திகதி, திங்கட்கிழமை (22) தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடும் இளைஞன், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, 22 ஆம் திகதியன்று மரணமடைந்த சம்பவம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதை செலுத்தி சென்ற இளைஞர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திங்கட்கிழமை (22) காலை உயிரிழந்தார் என்று நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் நுவரெலியாவின் ஹாவா எலிய பகுதியைச் சேர்ந்த மனித் அபூர்வ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலிய சந்தியில் ஞாயிற்றுக்கிழமை 21) இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டிலிருந்து நுவரெலியா நகருக்குள் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், குறித்த சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் செல்ல முற்பட்டபோது, இராகலையில் இருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாக சென்ற லொறியில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விபத்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21வது பிறந்தநாள் திங்கட்கிழமை (22) ஆகும் .
உயிரிழந்த இளைஞன் நுவரெலியா மாவட்ட பிராந்திய செய்தியாளர் சம்பத் ஜெயலாலின் ஒரே மகன் ஆவார்.
7 minute ago
10 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
15 minute ago
19 minute ago