2026 மே 09, சனிக்கிழமை

dd

25 அடி பள்ளத்தில் பாய்ந்து ஓட்டோ விபத்து; மூவர் படுகாயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் மல்லியப்பூ பகுதியில்,  25அடி பள்ளத்தில் பாய்ந்து ஓட்டோ ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (18) முற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள், டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

ஹட்டனில் இருந்து  குடாகம நோக்கிப் பயணித்த ஓட்டோவொன்றே, வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .