2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

28,838 பேர் பாதயாத்திரையாக கதிர்காமத்துக்குச் சென்றுள்ளனர்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குமண மற்றும் யால தேசிய வனம் ஊடாக 28838 பேர் கதிர்காமத்துக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர் என கிழக்கு மாகாண உதவி வனஜீவராசிகள் பணிப்பாளர் பிரசாந்த விமலதாச தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கதிர்காமத்துக்கு யாத்திரிகர்கள் செல்வதற்காக குமண தேசிய வனத்தின் பிரதான நுழைவாயில் ஜூலை மாதம் 22ஆம் திகதி திறக்கப்பட்டதுடன், தினமும் காலை 6 மணிதொடக்கம் பிற்பகல் 3 மணிவரையும் குமண தேசிய வனத்தின் பிரதான நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த அனுமதியானது இந்த மாதம் 5ஆம் திகதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு யால மற்றும் குமண தேசிய வனங்கள் ஊடாக சென்ற 28,838 யாத்திரிகர்களுள் 1736 பேர் 18 வயதுக்குக்கு குறைந்த சிறுமிகள் என்றும் 2406 பேர் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என்றம் 9958 பேர் 18 வயதுக்கு மேற்பட்ட யுவதிகள் என்றும் 14767 பேர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மழைக்கான எவ்வித அறிகுறியும் யால மற்றும் குமண தேசிய வனப் பிரதேசத்தில் காணப்படாத நிலையில், 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் குறித்த வனப் பகுதிக்குள் பிரவேசித்தவர்கள் கடும் மழையடனான வானிலைக்கு முகம்கொடுக்க நேரிட்டது என்றார்.

இதன்போது குறித்த இரண்டு வனப்பகுதிகளையும் பிரிக்கும் கும்புக்கன் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்ததால், யாத்திரிகர்கள் பெரிதம் சிரமத்தை எதிர்கொண்டதாக குறித்த வனப்பகுதிக்கு பொறுப்பன அதிகாரி ஆ.ஏ.டீ.டி சமரநாயக்க தெரிவித்தார்.

எனினும் இதன்போது இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் யாத்திரிகர்கள் அக்கரையிலிருந்து இக்கரைக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டதாக தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .