Janu / 2023 ஜூன் 19 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை ஆக்கரத்தனை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருள் நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதோடு அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சொட் கன் ஒன்றும் மற்றும் வெடிபொருள் நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றுமாக இரண்டு துப்பாக்கிகளை மீட்டுள்ளனர். அத்துடன் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் 3 துப்பாக்கிகளையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பசறை பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


34 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago
09 May 2026