எஸ்.சதிஸ் / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக்கோயா - போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, ஒருவருடகாலமாக தற்காலிகக் கூடாரங்களில் வாழ்ந்து வரும் அனைவருக்கும், கட்சி, பேதங்கள் இன்றி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு, விரைவில் கையளிக்கப்படும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
டிக்கோயா - போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, நேற்று (02) சந்தித்து கலந்துரையாடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
30 ஏக்கர் தோட்டத்தில், தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள முதற்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இன்னும் இரண்டு வாரங்களில், தேசியக் கட்டட ஆய்வாளர்களின் அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றவுடன், வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, குறித்த தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் கடன் பெற்றுள்ளதாகக் கூறி, அவர்களுடைய சம்பளத்தில் ஒரு தொகை பணத்தை, தோட்ட நிர்வாகம் அறவிடுவது குறித்து, இதன்போது தோட்டத் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில், தோட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் சமூகநல உத்தியோகத்தருக்கு எதிராக, விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பணிப்புரை விடுத்தார்.
9 hours ago
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 May 2026
13 May 2026
13 May 2026