Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளவி கொட்டியதில் நான்குவயது சிறுவனொருவன், பரிதாபகரமாக உயிரிழந்தச் சம்பவமொன்று, மஹியங்கனையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கிராந்துருகோட்டே, பதலயாய துங்கொலவத்த என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய தாத்தாவுடன், பச்சைமிளகாய் பறிப்பதற்காக, விவசாயத் தோட்டத்துக்கு சென்றிருந்த போது, சிறுவன் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago