Janu / 2023 ஜூன் 04 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
40 கஞ்சா செடிகள் 510 கிராம் உலர்ந்த கஞ்சாவுடன் நபர் ஒருவர் அம்பகஸ்தோவையில் கைது. அப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பன்வில அம்பகஸ்தோவை பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது பயிரிடப்பட்ட 40 கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளனர்.
பன்வில பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடமிருந்து உலர்ந்த கஞ்சா 510 கிராம் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கஞ்சா செடிகள் மற்றும் உலர்ந்த கஞ்சாவுடன் சந்தேக நபரையும் விஷேட அதிரடிப் படையினர் அம்பகஸ்தோவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்பகஸ்தோவை பொலிஸார் தெரிவித்தனர்.
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago