செ.தி.பெருமாள் / 2019 மார்ச் 11 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிமலை பகுதியில், மஸ்கெலியா பிளான்டேசனுக்குச் சொந்தமான மினாக்கொலை தோட்டத்துக்குச் செல்லும் 2 கிலோமீற்றர் வரையான வீதி, கடந்த 40 வருடங்களாக, செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக உள்ளதென, பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
கடந்த பிரதேச சபைத் தேர்தலின் போது, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், வீதியைச் செப்பனிடும் முகமாக, அதற்குத் தேவையான கற்களைக் கொண்டு வந்துக் குவித்ததாகவும் அதற்கான பெயர்ப்பலகை இணைக்கப்பட்டு, பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதும், அவ்வீதி, இதுவரை செப்பனிடப்படாமல் உள்ளது என்றும், இதனால், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், நோயாயளிகள், கர்ப்பிணித் தாய்மார் என அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில், குறித்த வீதியில் பயணித்து வருவதாக தெரியவருகின்றது.
எனவே, இந்த வீதியை உடனடியாகச் செப்பனிட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள தோட்ட மக்கள், அவ்வாறு செப்பனிடாவிடத்து, இனிவரும் தேர்தலில், யாரும் வாக்குக் கேட்டு தோட்டப்பகுதிக்கு வந்துவிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago