R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி- மாத்தளை வீதியில் அக்குறணை நகரில் வைத்து லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 400 லீற்றர் டீசலை அலவத்துகொடை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அக்குறணை நகரில் வைத்து குறித்த லொறி சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது லொறியிலிருந்து 400 லீற்றர் டீசல் அடங்கிய இரண்டு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (31) கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026