2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

42 மாணவர்கள் வைத்தியசாலையில்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

 திடீர் ​சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும் 29 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் ​அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் சிலருக்கு நேற்றும் (10) காய்ச்சல், மயக்கம் போன்ற  நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், இதனால் அவர்கள் நேற்று மாலையும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இவர்களுள் சில மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், சில மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களில் நிலை பாரதூரமாக இல்லை என்றும்  வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .