2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’4சதவீத மக்களுக்குக் கழிப்பறைகள் இல்லை’

Nirosh   / 2021 ஜனவரி 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மஸ்கெலியா  நிருபர் செ.தி.பெருமாள்)

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 15 சதவீத மக்கள் எந்தவிதமான சுகாதார வசதியின்றி வாழ்வதாகவும், அதில் 4சதவீத மக்கள் கழிப்பறைகளைப் பாவிப்பதில்லை எனவும், 30,000 பேர் கழிப்பறையின்றி  உள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர் புஸ்பகுமார  தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், வாக்காளர் கணிப்பீட்டு துரையினர் ஊடகக் கிடைக்கப்பெற்ற தகவலின் படி,  196,803 இல்லங்கள் உள்ளதாகவும் இதில் 29,607 சுகாதார கட்டமைப்பு  இல்லை எனவும்,  7,669 குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 773,000 மக்கள் உள்ளனர். இதில், 115,950 பேருக்குக் கழிப்பறையில்லை. மேலும் 30,000 பேர் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X