2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

5,500 ஏக்கர் தரிசு நிலங்களில் நெற் செய்கை

Kogilavani   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கடந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா முடக்கக் காலத்தில், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 5,500 ஏக்கர் தரிசு நிலக் காணியில், நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட கமத்தொழில் ஆணையாளர் சீ.பீ.குமாரி தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், இவ்வருடத்தில், மேலும் 1,500 ஏக்கர் தரிசுநிலக் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக இரத்தினபுரி மாவட்டத்தில், மொத்தமாக 63,649 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நெற் செய்கைக்குத் தேவையான யூரியா, ரீ.எஸ்.பீ, எம்.ஓ.பீ. ஆகிய பசளைகள், 6,290 மெட்ரிக் தொன் அளவு விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் இம்மாவட்டத்தில் வீட்டு தோட்டச் செய்கைக்காக 84,154 விதைப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X