Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 20 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் இ.போ.ச பஸ் டிப்போவால் இம்முறை 50 இலட்சம் ரூபாய்க்கு மாதாந்த பருவச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக டிப்போ முகாமையாளர் டபிள்யு.ஜி.ஜே.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
ஹட்டன் டிப்பாவால் மாதாந்த பருவச் சீட்டு 18- 19 இலட்சம் ரூபாய் வரையே இதுவரை காலங்களும் விநியோகிக்கப்பட்டதாகவும் எனினும் மே மாதம் 33 இலட்சம் ரூபாய் வரை இது அதிகரிக்கப்பட்டதுடன் தற்போது 50 இலட்ச ரூபாயை நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினையால் தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, உரிய நேரத்துக்கு தனியார் பஸ் கிடைக்காமை காரணமாக, இ.போ.ச பஸ்கள் மூலம் மாணவர்களின் பயணத்துக்காகவும் சாதாரணமாக அலுவுலகம் செல்லும் பிரயாணிகளுக்காகவும் இவ்வாறு பருவச்சீட்டு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் டிப்போ மூலம் நாளொன்றுக்கு 80 பஸ்கள் குறுகிய நெடுந்தூர சேவைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த அவர், தற்போது பஸ்களுக்கான பணியாளர்கள் பஸ் டயர்களுக்கான பற்றாக்குறை காணப்பட்டாலும் பருவச்சீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ள மாணவர்கள் மற்றும் பயணிகளுக்காக உரிய முறையில் பஸ் சேவையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago