மொஹொமட் ஆஸிக் / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
54 ஆயிரம் பட்டதாரிகளுக்கு, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தொழில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, போக்குவரத்து, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேசத்தில், நேற்று முன்தினம் (28), நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர், மக்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் தான் இறங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அதன் அடிப்படையில், நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் 20 இலட்சம் ரூபாய் வீதம் அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதேபோன்று, நாட்டில் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் தொழில் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, நாட்டிலுள்ள 54 ஆயிரம் பட்டதாரிகளுக்கு, ஜனவரி மாதம் முதல் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
அது மட்டுமன்றி, குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த, குறைந்த கல்வித் தகமைகளைப் பெற்ற 1 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
21 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago