Kogilavani / 2021 ஜனவரி 17 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
அரியவகை பறவைகளைப் பிடித்து அவற்றைக் கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்ய முயன்றக் குற்றச்சாட்டில், அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை கைதுசெய்துள்ளதாக, மாத்தளை ரஜ்ஜம்மன வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மேற்படிப் பிரதேசத்தைச் சுற்றிவளைத்து சோதனையிட்ட அதிகாரிகள் மூவரைக் கைதுசெய்துள்ளதுடன், 55 கிளிகள், 5 குருவிகள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
இவற்றை கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்யும் முயற்சியில் மேற்படி மூவரும் ஈடுபட்டுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு உரித்தானப் பறவைகளை வெளிநாடுகளுக்கு விற்பனையும் செய்யும் முயற்சிகளில் விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தேசிய இனங்களைப் பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago