2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

5ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 29 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியாவில் பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றின்  ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர், அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குறித்த ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த    இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய, பிரியந்த எட்டியாராச்சி என தெரிவித்துள்ள பொலிஸார், இவர் தவறி விழுந்த போது, மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .