2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

6 கிலோகிராம் போதைப் பொருளுடன் நால்வர் சிக்கினர்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

6.800 கிலோகிராம் போதைப் பொருளுடன் நால்வர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் நேற்று(6) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவை பிரதேசத்தை அண்மித்த தோட்டங்களிலுள்ள இளைஞர்களை இலக்கு வைத்து, இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சந்தேகநபர்களின் வீடுகள், அவர்களின் வர்த்த நிலையங்களை பொகவந்தலாவை பொலிஸாரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே பெறுமளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X