Editorial / 2019 மார்ச் 19 , மு.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
அம்பகமுவ பிரதேச்சபையின் கீழ் பராமரிக்கப்படும் கினிகத்தேனை, பிட்டவல உள்ளிட்ட ஆறு கிராமங்களுக்குச் செல்லும் பிராதான பாதையானது, கொங்ரீட் பாதையாகச் செப்பனிடப்படவுள்ள நிலையில், இதற்கான புனரமைப்புப் பணிகள், நேற்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மத்திய மாகாண ஆளுநரின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், சுமார் 65 இலட்சம் ரூபாய் செலவில், இந்தப் பாதை செப்பனிடப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, மேற்படி பாதையின் இரண்டு கிலோமீற்றர் தூரமான பகுதி செப்பனிடப்படவுள்ளது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது அவர், ஓட்டோ தரிப்பிடங்களில் தரித்து நிறுத்துவதற்காக, அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள ஓட்டோக்களைப் பதிவுசெய்து, அவற்றுக்கான ஸ்டிக்கர்களை ஒட்டும் வேலைத்திட்டத்தையும் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago