Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
பெருந்தோட்ட அபிவிருத்திக்காக, 7.86 பில்லியன் ரூபாய் நிதி, பெருந்தோட்ட அமைச்சில் உள்ளதென்று சுட்டிக்காட்டியுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், இந்நிதியை, எதிர்வரும் பத்து மாதங்களில், அபிருத்தித் திட்டங்களுக்கென செலவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
பண்டாரவளையில் நடைபெற்ற, பதுளை மாவட்ட தேசிய ஒருங்கிணைந்த விளையாட்டுத் திருவிழாவில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,
மலையகப் பெருந்தோட்டங்களை முகாமைத்துவப்படுத்திவரும் 22 கம்பனிகளும் பெருந்தோட்ட கைத்தொழிற்றுறை அமைச்சின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும், பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களுக்கு, இனி எவராலும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களில் அபிவிருத்திகளை முன்னெடுக்க இனிமேல் தோட்ட நிர்வாகங்கள், அதிகாரிகளைக் கெஞ்சிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்றும் தான் உத்தரவு வழங்கினால், அனைத்து அபிவிருத்திகளும் செவ்வனே இடம்பெறும் என்றும் கூறினார்.
பெருந்தோட்ட அமைச்சிலுள்ள 7.86 பில்லியன் ரூபாய் நிதிக்கும் மேலதிகமான நிதியை வழங்குவதற்கு, அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அந்நிதியையும் பெருந்தோட்ட அபிவிருத்திக்காகப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிதியைக் கொண்டு, குறுகிய காலத்தில் பெருந்தோட்டங்களின் மக்கள் நலன்சார் அபிவிருத்திகளை செய்து முடிக்கவுள்ளதாகவும் அதற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago