Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய கட்டட நிர்மாணிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர் மின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முழுமையாக பாதிக்கப்பட்டு அதற்கு பதிலாக 7 கட்டட தொகுதிகளை நிர்மாணித்து கொடுப்பதாக இலங்கை மின்சார சபை மத்திய மாகாண கல்வி அமைச்சினூடாக ஒப்பந்தம் செய்திருந்தது.
அதற்கு அமைய 4 வகுப்பறை கட்டடத் தொகுதிகளை நிர்மாணித்து எஞ்சிய கட்டடங்கள் மாத்திரம் இழுபறிக்கு மத்தியில் நிர்மாணித்து பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், பாடசாலைக்கு நிர்மாணித்து வழங்க வேண்டிய சகல வசதிகளுடன் கூடிய கேட்போர் கூட கட்டடத்தை நிர்மாணித்து கொடுப்பதில் இலங்கை மின்சார சபையின் மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இலங்கை மின்சார சபை, கல்வி அமைச்சுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கமையவே குறித்த கட்டடங்களை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும் என ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த போதிலும் கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில், பாடசாலையின் அப்போதைய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூவர், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2014 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தனர்.
அதற்கமைய, எட்டு வருடங்களாக விசாரிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 30ஆம் திகதி மூவர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதற்கமைய, செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சகல வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடத்தை நிர்மாணித்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை மின்சார சபைக்கு உரியது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago