2026 ஜனவரி 21, புதன்கிழமை

80 அடிக்குள் இழுத்துச் சென்ற செல்பி

Kogilavani   / 2021 மே 19 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன்  

மொனராகலை பிபிலை கரம்மிட்டிய மலைக்குச் சென்ற செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று, பிபிலை  பொலிஸார் தெரிவித்தனர்.

பிபிலை மெதகம பிரதேசத்தைச் சேர்ந்ந 19 வயதான எ.எம்.அகில என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பர்களுடன்  மலைக்குச் சென்றபோதே, காலிடறி விழுந்துள்ளார் என்று தெரியவருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக  பிபிலை பிரதான வைத்தியசாலையிலன் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X