Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை தவணை முறையில் பெறப்படும் எனவும், அந்த தொகை கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறைவடையும் எனவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் கடன் தவணை கிடைக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறையும். அத்துடன், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாவலப்பிட்டி நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாவலப்பிட்டி நகரசபையில் சனிக்கிழமை (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, நாவலப்பிட்டி நகர சபைக்கு ஐ.தே.க மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிருக்கின்றனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் (10) நாவலப்பிட்டி மாநகர சபையின் ஆட்சியை அந்த வேட்பாளர்கள் கைப்பற்றுவார்கள் என்றார். பல வருடங்களாக மின்கட்டணம் அதிகரிக்கப்படாததால் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் பாவனையாளர்களுக்கு போதியளவு எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது எனவும், தற்போதைய அரசாங்கம் இன்னும் இரண்டரை வருடங்கள் ஆட்சியில் இருக்கும் எனவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறையும் என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
25 minute ago
41 minute ago