Janu / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் புதன்கிழமை (18) இடம்பெற்றது.
பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள் பயணித்திருந்ததுடன், மேலும் ஒருவரான ஆசிரியர் முச்சக்கர வண்டியை செலுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முச்சக்கரவண்டியில் தீப்பற்ற ஆரம்பித்ததையத்து பின்னால் வந்த இலங்கை மின்சார சபைக்குரிய லொறியில் பயணித்த பணியாளர்கள் விரைந்து முச்சக்கர வண்டியை நிறுத்தி, தீயை கட்டுப்படுத்தியதுடன், அதில் பயணித்த ஆசிரியர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையுடன், பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் மீளப் பெற்றுக் கொள்ளவும் உரிய வாகன ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன
நடராஜா மலர்வேந்தன்

50 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
3 hours ago