2025 மே 17, சனிக்கிழமை

PMT முறையில் பண மோசடி செய்தவர் கைது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

அரச துறையில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, தபால் அலுவலகம் ஊடாக செயற்படுத்தப்படும்  PMT முறை  நிதி மோசடி செய்த நபர் ஒருவர் பதுளையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில்,பதுளை, மஹியங்கனை மற்றும் ஹாலிஎல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பதுளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பண்டாரவளை பகுதியில்  வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சந்தேகநபர், கடந்த கொரோனா தொற்றின் போது, ​​பதுளை பொது நூலகத்திற்கு வருகை தரும் நபர்களின் தகவல்களை பதிவு செய்ய வைத்திருந்த புத்தகத்தின் இரண்டு தாள்களை கிழித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அலைபேசி உரையாடல்களின் போது, தொழில் இல்லாதவர்களுக்கு அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .