Janu / 2025 ஜூன் 04 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள், தொழில்நுட்ப துறையை சார்ந்த பொறியியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் உள்ள பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் புதன்கிழமை(03) இடம் பெற்றது.
இந்த சந்திப்பின் போது ஊடகத்துறை சார்பாக திரைப்பட நடிகரும் முன்னணி தொகுப்பாளருமான VJ விஜய் கலந்து கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் மருத்துவத்துறை முதலீடுகள் மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ்நாட்டுக்கும் மலையக மக்களுக்கும் இடையிலான ஊடக தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எஸ். சதீஷ்



13 minute ago
24 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
46 minute ago