Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், நீலமேகம் பிரசாந்த்
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் புதிய காரியாலயம், இம்மாதம் 30ஆம் திகதி காலை, பசுமலை நகரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது என, பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கதிர்செல்வன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, இன்று (21) கருத்துத் தெரிவித்த அவர்,
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர், புதிதாக உருவாக்கப்பட்ட பிரதேசத்தில் சபைகளில், அக்கரப்பத்தனை பிரதேச சபை உள்ளடங்குவதாகவும் அந்த காரியாலயம் ஆரம்பிக்கப்பட்டு, காரியாலய நடவடிக்கைகள், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரிலுள்ள பொது வாசிகசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை கட்டத்தில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் காரியாலயத்தில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக, டயகம, அக்கரப்பத்தனை, நாகசேணை பிரதேசங்களிலிருந்து வருகை தரும் மக்கள், பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இத குறித்து தன்னுடைய கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஆறுமுகம் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதையடுத்தே, காங்கிரஸ் தலைவரின் ஆலோசனைக்கமைய, பசுமை நகரத்தில், பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுநூலகம், ஆயுர்வேத வைத்தியசாலை கட்டத் தொகுதியில் திறப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதன்மூலம், அக்கரப்பத்தனை பிரசேச சபைக்கு உள்வாங்கப்பட்டுள்ள டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, பசுமலை, மெராயா, நாகசேனை, ஹில்டன்ஹோல் ஆகிய நகரப்பகுதிகளை உள்ளடக்கிய 105 தோட்டப்பகுதிகள், கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இலகுவாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago