ஆ.ரமேஸ் / 2019 ஜனவரி 14 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை கந்துரட்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏட்பாட்டில் , தைப்பொங்கல் தினத்தையொட்டி, பொங்கல் விழா, எதிர்வரும் 16ஆம் திகதி காலை 10 மணிக்கு, அக்கரபத்தனை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள், வங்கி முகாமையாளரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கரப்பத்தனை பிரதேசத்தை உள்ளடக்கி, முதன் முறையாக, தமிழர்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்வில், பாரம்பரிய இசை, கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் பிரதேச மக்களின் நலன் கருதி, விஷேட வங்கிச் சேவைகள் இடம்பெறவுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் மேற்கொண்டுள்ள வைப்புக் கணக்குளுக்கு விஷேட பரிசுகள், நிலையான வைப்புகளுக்கு விஷேட வட்டி வீதம் போன்றனவும் வழங்கப்படவுள்ளன.
பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ள மக்களுக்கும், விஷேட பரிசுகள் வழங்கவுள்ளது என்றும் எனவே, அக்கரபத்தனை பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும், இந்தப் பொங்கல் விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago