2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜெட் பாஸ்

R.Maheshwary   / 2021 நவம்பர் 17 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன் 

அக்கரப்பத்தனை  பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்காண வரவு செலவு திட்டம் 06 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் இந்த மாத்ததுக்கான சபை அமர்வு சபை தவிசாளர் எஸ். கதிர்செல்வன்  தலைமையில் நேற்று(16) காலை, நாகசேனை  பிரதான  கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அக்கரப்பத்தனை பிரதேச சபையின்   15 உறுப்பினர்களில் ஐ.தே.க உறுப்பினர்கள் 02 பேரும் ஆளும் கட்சியான இ.தொ.கா உறுப்பினர்கள் 04 பேரும் என 06 பேர் மாத்திரமே இம்மாத சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்தனர்.

ஏனைய 09 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சபை தவிசாளர் எஸ்.கதிர்செல்வன்  2022 ஆம் ஆண்டுக்கான வரவு/செலவு திட்ட அறிக்கையை சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு  சமர்ப்பித்தார்.

இதன் போது தவிசாளரால் சமர்பிக்கப்பட்ட வரவு/செலவு திட்ட அறிக்கை தொடர்பில்  சிறுசிறு திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

 

இதனையடுத்து சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்த உறுப்பினர்கள் வரவு/செலவு திட்டத்திற்கு ஆதரவாக தமது வாக்குகளை வழங்கியதுடன், வரவு/செலவு திட்டத்தை எதிர்ப்புகள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .