Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்
அக்கரப்பத்தனை பிரதேசபையின் தலைவராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சுப்பிரமணியம் கதிர்செல்வனும் உப தலைவராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான ஜயலத் விஜயதுங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, அக்கரப்பத்தனை பிரதேச சபையையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தன்வசமாக்கியுள்ளது.
இந்தப் பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத் தலைமையில், இன்று (27) காலை நடைபெற்றது. தலைவர் பதவிக்காக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் சுப்பிரமணியம் கதிர்செல்வனும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக வேலு சிவானந்தனும் போட்டியிட்டனர். தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு திறந்த முறையில் நடைபெற்றது.
இதில் எட்டு வாக்குகளைப் பெற்று, சபையின் தலைவராக இ.தொ.கா உறுப்பினர் சுப்பிரமணியம் கதிர்செல்வன் தெரிவு செய்யப்பட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago