Editorial / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ், கு.புஷ்பராஜ்
அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்டத்தில் அமைந்துள்ள, தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், இன்று (20) காலை, பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், தொழிற்சாலை தொழில் மேற்பார்வையாளர் ஒருவரை விலக்க கோரி ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், வெவர்லி தோட்ட தொழிற்சாலையில் பணியாற்றும் ஆட்லி, மொணிங்டன் இரு பிரிவுகள், போட்மோர், வெவர்லி ஆகிய தோட்ட பிரிவுகளில் இருந்து, தொழிற்சாலையில் பணிபுரியும் 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோசங்கள் எழுப்பி, ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
வெவர்லி தோட்ட தேயிலை தொழிற்சாலையில், தலைமை தொழில் மேற்பார்வையாளராக பணியாற்றும் ஒருவர், தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், இந்த தொழிலாளர்களின் அடிப்படை தொழில் உரிமைகளை வழங்காது, வேலையை மாத்திரம் பெற்று கொள்வதும், குறித்த மேற்பார்வையாளர், அடக்கு முறை கொள்கையை கொண்டிருப்பதாலும், இவரை தோட்ட அதிகாரி உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இதனையடுத்து, காலை 10 மணியளவில், தொழிற்சாலைக்கு வந்த தோட்ட அதிகாரி இர்த, தொழிலாளர்களின் பிரச்சினை மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து, விசாரணையின் பின் தொழிற்சாலை மேற்பார்வையாளரை விலக்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், தொழிற்சாலையில் பணியாற்றும், தொழிலாளர்களின் அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் ஏனைய உரிமைகளை செய்துதர உத்தரவு வழங்கியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள், தம் கோரிக்கை பற்றி, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மீண்டும் போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.
23 minute ago
27 minute ago
40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
40 minute ago
55 minute ago