Editorial / 2023 ஜூன் 25 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அக்குறனை துனுவில பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரி-56 ரவைகள் 11, அலைபேசிகள் 29, இராணுவ ஜெக்கெட், ஹெரோய்ன் 2070 மில்லிகிராம், தடைச்செய்யப்பட்ட கத்திகள் 7 மற்றும் 17,040 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபருடன் இருந்த பிரதான சந்தேகநபர், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் தீகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபரான 43 வயதான நபர், ஈசி காஸ் முறைமையின் ஊடாக போதைப்பொருள் விநியோகிக்கும் நபர் என்றும் அறியமுடிகின்றது. அவரிடமிருந்த கைக்குண்டு கொழும்பு பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடம் இருந்து விலைக்கு கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால் அவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 minute ago
29 minute ago
42 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
42 minute ago
10 Nov 2025