மொஹொமட் ஆஸிக் / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை பிரதேச சபையில், இரண்டு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் நிலவி வருவதாக, அதன் தவிசாளர் ஐ.எம். இஸ்திஹார் தெரிவித்தார்.
அக்குறணை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்த என்.ஜெயசீலன் காலஞ்சென்றமையால், ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம்.சிம்சான், வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதால், மற்றுமொரு அங்கத்தவருக்கான வெற்றிடம் காணப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
எனவே, வெற்றிடமாகவுள்ள அங்கத்தவர்கள் குறித்து உரிய தரப்புக்கு அறிவித்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago