2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

அக்குறணையிலும் வெடித்தன

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை பிரதேசத்தில் நேற்று இரண்டு சமையல் எரிவாயு  அடுப்புகள் வெடித்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்குறணை- தெழும்புகஹவத்தை பிரதேசத்திலும் பானகமுவ பிரதேசத்திலும் இவ் இரு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதன் காரணமாக எவருக்கும்  காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை வேளையில் வெடித்துள்ளதுடன் ,தெழும்புகஹவத்தையில் வெடித்த அடுப்பு அணைக்கப்பட்டிருந்த நிலையில் ​வெடித்துள்ளது.

இது தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .