Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை - ஹரிஸ்பத்துவ தொகுதி உடஹிங்குல்வல குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் துணுவில குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றின் ஆரம்பகட்டப் பணிகளை, நீர் வழங்கல் மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நேற்று (07) ஆரம்பித்து வைத்தார்.
இந்த நீர் வழங்கல் திட்டங்களின் ஊடாக, உடஹிங்குல்வல, பியபத்கம, உடஹேன, பதிராவத்த, லிலிவெலிவத்த, துணுவில வடக்கு, துணுவில கிழக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4,500 பேர் பயனடையவுள்ளனர்.
இந்நிகழ்வில், தபால், தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களான உபைதுல்லா, மிஹ்ரார், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .