2025 மே 19, திங்கட்கிழமை

அச்சத்துடன் கடக்கும் பாலத்தை புனரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக்  தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று (14)  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

  குறித்த பாலத்தை, 800க்கும் மேற்பட்டவர்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.

 92 ஆம் ஆண்டுக்கு  முன்னர்  இங்கு பலகைகளால் ஆன பாலத்தையே பிரதேசவாசிகள் பயன்படுத்தி வந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இரும்பினால் இரண்டரை அடி அகலமும் 30 அடி நீளமும் கொண்ட பாலம் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது..

 எனினும் கடும் மழையின் போது பாலம் வெள்ளத்தில் மூழ்குவதுடன்,மழைக் காலங்களில் பாலத்தை கடக்க முடியாதவாறு பாலம் பழுதடைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு, மலையக அரசியல்வாதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த  போதிலும் இதுவரை எவரும் இதனை புனரமைத்து கொடுக்க முன்வரவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X