Editorial / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
ஹப்புத்தளை, தம்பேதன்ன மவுசாகல தோட்டத்தில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட 68 குடும்பங்களுக்கு, புதிய வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (26) நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ், இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இங்கு நிர்மாணிக்கப்படவுள்ள ஒரு வீட்டுக்கு, 12 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago