2025 ஜூலை 23, புதன்கிழமை

அட்டனுக்கு பிரதமர் விஜயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ், மு.இராமச்சந்திரன் 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளை (06) அட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பில் இவர் கலந்துகொள்வதுடன், அன்றைய தினத்தில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்

இந்த நிகழ்வுகளை நுவரெலியா மாவட்ட ஐ.தே.கா நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஏற்பாடு செய்துள்ளார்.

பிரதமரின் 40 வருட அரசியல் பிரவேசத்தையொட்டி, இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் நுவரெலியா - அம்பேவெல தேசிய பால் பண்ணைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பால் சபை நிலைய கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .