Editorial / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேல்கொத்மலை நீர்த்தேக்க அணையில் கனரக வாகனங்கள் செல்வது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தடைபட்ட சாலைகள் சீரமைக்கப்படும் வரை இலகுரக வாகனங்கள் மட்டுமே நீர்த்தேக்க அணையின் ஊடாக பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் மகாவலி மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் எச்.எம்.ஜே. ஹேரத் தெரிவித்தார்.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பது தொடர்பாக இந்த நாட்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை என்றும், கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியாளர்கள் அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
கொத்மலை நீர்த்தேக்க அணையை ஆய்வு செய்து, கொத்மலை மகாவலி மேம்பாட்டு அதிகாரசபை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மகாவலி மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், எதிர்காலத்தில், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறப்பதற்கு முன்பு பொதுமக்களுக்குத் தெரிவிக்க தற்போது செயல்படுத்தப்படும் முறையை விட வேறுபட்ட முறை செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
10 minute ago
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
44 minute ago