Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பானது, மரத்திலிருந்து விழுந்தவனை மாடு
முட்டிய கதையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,ஒரு பக்கம் வேலையின் அளவு அதிகரிக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் வேலைநாள்கள் குறைக்கப்பட்டிருக்கிறன. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. மறுபக்கம் வானை முட்டும் அளவு பொருள்களின் விலையேற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. முறையான ஊதியம் இல்லை சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்களும் இல்லை.
இதன் விளைவாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிரமத்தின் மத்தியில் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் வாழ்வாதார ரீதியில், பின்னடைவை
எதிர்நோக்குவது கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக சரியான வேலை வாய்ப்புக்கள் இன்றி,
போதிய ஊதியம் இல்லாத இத்தகைய சூழ்நிலையில் இந்த பொருள்களின் விலை
அதிகரிப்பானது, ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது என்றார்.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago