Janu / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டம்,எந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடலகம தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயத்திற்கு இனந்தெரியாத சிலர் சனிக்கிழமை(10) மாலை தீ வைத்ததால் அங்கிருந்த மிக முக்கியமான ஆவணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சனிக்கிழமை மாலை பாடசாலை கட்டிடத்தில் இருந்து திடீரென பாரிய புகை வெளிவந்ததை கவனித்த பிரதேச மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி சென்று தீயை அணைத்து நிலமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
மூடப்பட்டிருந்த இப்பாடசாலையின் மற்றவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற இனந்தெரியாத நபலடகளட அலுமாரியில் உள்ள அனைத்து ஆவணங்களையும் வெளியே எடுத்து கீழே போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது .
இது தொடர்பில் எந்தான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இது , இப் பாடசாலைக்கு அருகில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபானமான கசிப்பு விற்பனை செய்பவர்களின் சதி வேலையாக இருக்குமென அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
உமா மகேஸ்வரி


27 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago