Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பல சபைகளை கைப்பற்றி அதிவிசேட வெற்றியை ஈட்டும் என காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்..
நோர்வூட் பிரதேச சபைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட் மற்றும் பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுத்த பிரசாரக் கூட்டங்களின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட மக்களுக்கு விசேட சேவைகளைச் செய்துள்ளது. ஆகையால், காங்கிரஸின் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது.
அதனை இம்முறை தேர்தலில் மக்கள் காண்பிப்பார்கள். அதனூடாக அதிவிசேட வெற்றியை காங்கிரஸ் பெற்றுக்கொள்ளும். காங்கிரஸூக்கு கிடைத்திருக்கும் அமைச்சின் ஊடாக, பெருந்தோட்டங்களுக்கு எதிர்காலத்தில் சேவைகளைச் செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களை கலைக்காமல் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்துள்ளமை தொடர்பில் அமைச்சின் செயலாளரே பதிலளிக்கவேண்டும் என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
18 minute ago