Editorial / 2023 மே 07 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேன் ஒன்று சனிக்கிழமை (6) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
ரதெல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த சாரதிக்கு முடியாமல் போனது. அந்தவான் பின்நோக்கி சென்றே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கிறனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனவரி மாதம் 20ம் திகதி நானுஓயா- ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர் அந்த இடத்திலேயே இந்த வேனும் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியது.


5 minute ago
8 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago