R.Maheshwary / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்வதற்காகப் பெறப்பட்ட அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் தேக்கு மரக்குற்றிகளை கொண்டுச் சென்ற லொறி ஒன்றை வத்துகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மஹியங்கனை- மஹஓயா பிரதேசத்திலிருந்து அம்பத்தென்ன பிரதேசத்திலுள்ள மர ஆலை ஒன்றுக்கு கொண்டுச் செல்லப்படும் குறித்த மரக்குற்றிகள் மிகவும் இரகசியமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் 38 நெல் மூட்டைகள் வெளியில் தெரியுமளவுக்கு வைக்கப்பட்டு, அதற்கு உள்ளே 126 தேக்கு மரக்குற்றிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ள பொலிஸார்,மரக்குற்றிகளை கடத்திய சந்தேகநபர்கள் இருவரையும் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .