2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

‘அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு‘

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

அத்தியாவசியப் பொருள்களின் விலையை அதிகரிப்பதற்காகவே, நாட்டில் அத்தியாவசிய
பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளி பதிவிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் அரிசி, சீனி, பால்மா வகைகள், சீமெந்து ,எரிவாயு போன்றனவற்றுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்தத் தட்டுப்பாட்டினைத் தொடர்ந்து, இந்த பொருள்களுக்கான விலைகளும் திடீரென
அதிகரிக்கப்பட்டு வருவதையும் அதனை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதையும்
அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு கிலோ பால்மா 200 ரூபாவால் அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
பெருந்தோட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதோடு, பொருட்களின் விலைகளும் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு விற்பனை
செய்யப்படுகின்றன.

இதனால் பொருளாதார ரீதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்கள் மேலும்,
பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை ஏற்றம் என்பன தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, நாட்டு மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X