2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

அநாகரீகமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Janu   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில்  ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகித்து, அநாகரீகமாக நடந்து கொண்ட 23 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், மொனராகலை பொலிஸாரால் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது.  

சந்தேக நபர் நிகவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று வீடு திரும்புவதற்காக மொனராகலை நகரத்திற்கு வந்த போது  மது அருந்திவிட்டு, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

நகரத்தில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X