2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அந்தரங்க உறுப்பை ஐயன் பண்ணிய கணவன் கைது

Editorial   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது என  ஹத்தரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

தனது மனைவியின் தகாத உறவு குறித்து அறிந்து கொண்ட கணவன், மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகாயங்களுக்கு உள்ளான பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட கணவன், கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .