Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு, வெள்ளம், நிலம் வெடிப்பு ஆகிய அனர்த்தங்களுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகளை அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் குழுவினர் அண்மையில் பார்வையிட்டனர்.
இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் நல்லதண்ணி-மஸ்கெலியா வீதி, நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவில் நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா சந்தியை அண்மித்த வீதி ஆகியன பார்வையிடப்பட்டன.
மண்சரிவு அபாயம் உள்ள வீதிகள், வெள்ளம் மற்றும் நில வெடிப்பு அபாயம் உள்ள வீதிகள் என்பன பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நுவரெலியா மாவட்ட செயலகம், மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
18 May 2025